இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்றப் பதிவாளர், எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றுத்தருவதற்காக, கொழும்பு மேல் நீதிமன்ற ஊழியர் ஒருவருக்கு 50,000 ரூபாவை இலஞ்சமாக வழங்க உதவிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.








