அமெரிக்காவில் டொனல்ட் ட்ரம் உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகள் குற்றவியல் வழக்குகளிலிருந்து ஓரளவே விலக்குப் பெற்றிருப்பதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முனையும் ட்ரம்புக்கு அது சட்டபூர்வமான வெற்றியாகக் கருதப்படுகிறது.
2020ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவை மாற்றியமைக்க ட்ரம் சதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தீர்ப்பு முழுமையாக நிராகரிக்கவில்லை. இருப்பினும் அவருக்கு எதிரான வழக்கின் முக்கியக் கூறுகளை அது நீக்கியுள்ளது.
அதிகாரபூர்வச் செயல்பாடுகளில் ஜனாதிபதி விலக்குப் பெற வாய்ப்பு உள்ளது. ஆனால், அதிகாரபூர்வமற்ற செயல்பாடுகளில் அதற்கு வாய்ப்பு இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
அமெரிக்காவின் அரசியலமைப்புச் சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் மாபெரும் வெற்றி என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் ட்ரம் தம்முடைய ட்ருத் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.