மட்டக்களப்பு வாழைச்சேனை அன் நூர் தேசிய பாடசாலையில் “ஸ்மார்ட் வகுப்பறை” நேற்று (3) காலை திறந்து வைக்கப்பட்டது.
குறித்த ‘ஸ்மார்ட் கிளாஸ் ரூமினை’ எதிர்கட்சி தலைவர் சஜீத் பிரேமதாச அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வைபவ ரீதியாக திறந்து வைத்து மாணவர்களின் பாவனைக்காக கையளித்தார்.
நவீன உலகில் வளமான டிஜிட்டல் எதிர்காலத்திற்காக இளைய தலைமுறையினரை ஸ்மார்ட் கணினி பயன்பாட்டில் தேர்ச்சி பெற்ற சமூகமாக கட்டியெழுப்பும் எதிர்கட்சி தலைவர் சஜீத் பிரேமதாசாவின் எண்ணக் கருவிற்கமைவாக ‘பிரபஞ்சம்’ ‘ஸ்மார்ட் கிளாஸ்’ திட்டத்தின் கீழ் 280 ஆவது ‘ஸ்மார்ட் கிளாஸ்’ தொகுதி முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமிர் அலியின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த பாடசாலையில் திறந்து வைக்கப்பட்டது.
அத்துடன் மாணவர்களின் ஆங்கில,தொழில் நுட்ப அறிவை மேம்படுத்தும் முகமாக தேவையான நூல்களை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக ஒரு இலட்சம் ரூபாய் பணமும் நூலகத்திற்காக பெறுமதி மிக்க நூல்களும் அன்பளிப்பு செய்யப்பட்டது.
குறித்த நிகழ்வானது கல்லூரி அதிபர் ஏ.ஆர்.எம்.நியாஸ் தலைமையில் நடைபெற்றதுடன், மாணவர்களினால் அதிதிகள் வெற்றிலை வழங்கியு,ம் பாண்ட் வாத்திய இசையுடன் வரவேற்கப்பட்டனர்.
நிகழ்வில் முன்னாள் இராஜங்க அமைச்சர்களான அல்ஹாஜ்.எம்.எஸ்.எஸ்.அமிர் அலி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஜக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாசந்திரா பிரகாஷ் மற்றும் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.ஜவாத் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.