தொழிலாளர் கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.
பிரித்தானியாவில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் 650 இடங்களில் தொழிலாளர் கட்சி 412 இடங்களிலும், 9.6 மில்லியன் வாக்குகளுடனும், அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தநிலையில், தொழிற்கட்சியின் தலைவரான கெய்ர் ஸ்டார்மரை அரசு அமைக்கும்படி பிரித்தானிய மன்னர் சார்லஸ் அழைப்பு விடுத்திருந்தார்.
இதனையடுத்து மன்னரின் அழைப்பை ஏற்று அவரை சந்தித்த ஸ்டார்மர், பிரித்தானியாவின் 58ஆவது பிரதமராகியுள்ளார்.
Gordon Brown என்னும் தொழிற்கட்சியின் தலைவர் பிரித்தானிய பிரதமராக பதவி வகித்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கட்சியைச் சேர்ந்த ஸ்டார்மர் தற்போது பிரதமராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.