Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்திய மாநிலம் ஒன்றில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஆய்வு; 828 மாணவர்களுக்கு ஏய்ட்ஸ் தொற்று!

இந்திய மாநிலம் ஒன்றில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஆய்வு; 828 மாணவர்களுக்கு ஏய்ட்ஸ் தொற்று!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

இந்திய திரிபுரா மாநிலத்தில் 828 மாணவர்கள் எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் மிக கொடிய நோய்களில் எய்ட்ஸும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலகம் முழுவதும் சுமார் 25 இலட்சம் பேர் எய்ட்ஸ் தொற்றுடன் வாழ்கின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில் இந்த தொற்றின் பாதிப்பு தீவிரமாக இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவிலும் இதன் பாதிப்பு வேகம் எடுத்துள்ளது.

அந்தவகையில், திரிபுராவில் கடந்த 2007 முதல் 2024 வரையிலான 17 வருட புள்ளி விவரங்களின்படி, சுமார் 828 மாணவர்கள் எச்.ஐ.வி தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதை திரிபுரா அரசும் உறுதிப்படுத்தியுள்ளது. முதலில் எந்த கால கட்டத்தில் இந்த பாதிப்பு ஏற்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை. இவ்விவகாரம் தொடர்சர்ச்சைக்குள்ளான நிலையில், கடந்த 17 வருடங்களுக்கான புள்ளி விவரம் என்பதை அம்மாநில அரசு உறுதி செய்தது. மேலும் திரிபுராவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதை பொருள் பயன்பாடு அதிகமாக இருப்பதே காரணம் எனவும் திரிபுரா அரசு கூறியுள்ளது.

இது குறித்து அடிக்கடி புகார்கள் எழுந்த நிலையில், சமீபத்தில் திரிபுரா எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அதிரடி சோதனையை மேற்கொண்டது. இந்த கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களிடையே பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் 828 மாணவர்கள் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டுள்ளதும், அவர்களில் 47 பேர் உயிரிழந்துள்ளதும் தெரியவந்தது. இதுமட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள பிரபலமான பல்கலைக்கழகங்களுக்கு திரிபுராவில் இருந்து மாணவர்கள் படிக்கச் சென்றிருக்கிறார்கள். அவர்களை மீண்டும் சொந்த மாநிலத்திற்கு திரும்ப அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் ஊசி மூலம் போதைப் பொருள் செலுத்திக்கொள்ளும் பழக்கம் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

‘சமித்புர சத்து’ தொடர்பான விசாரணையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!
செய்திகள்

‘சமித்புர சத்து’ தொடர்பான விசாரணையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!

August 20, 2026
செம்மணியை பார்வையிட வந்து பாதியில் திரும்பிய கனேடிய தூதரக பிரதிநிதிகள்
செய்திகள்

செம்மணியை பார்வையிட வந்து பாதியில் திரும்பிய கனேடிய தூதரக பிரதிநிதிகள்

August 20, 2026
பஸில் ராஜபக்ஷவின் பிணைத்தொகையை பறிமுதல் செய்ய மாத்தறை நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

பஸில் ராஜபக்ஷவின் பிணைத்தொகையை பறிமுதல் செய்ய மாத்தறை நீதிமன்றம் உத்தரவு!

August 20, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 37 மனுக்கள் தாக்கல்!
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 37 மனுக்கள் தாக்கல்!

August 20, 2026
யோஷித ராஜபக்ஷ, வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு!
செய்திகள்

யோஷித ராஜபக்ஷ, வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு!

August 20, 2026
ஈரானுக்கு எதிராக கடும் பொருளாதார நடவடிக்கை; ட்ரம்ப் எச்சரிக்கை!
உலக செய்திகள்

ஈரானுக்கு எதிராக கடும் பொருளாதார நடவடிக்கை; ட்ரம்ப் எச்சரிக்கை!

August 20, 2026
Next Post
வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையின் முன் வாயில் திறப்பு விழா!

வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையின் முன் வாயில் திறப்பு விழா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு