கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையின் முன் வாயில் திறப்பு விழா நேற்று (11) சமய வழிபாட்டுடன் நடைபெற்றது.
கல்லூரியின் அதிபர் ஏ.ஜெயக்குமணன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், பிரதம அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் நேச கஜேந்திரன்,திருமதி க.கோமதி க.கிரிராஜன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
2003ஆம் ஆண்டின் பழைய மாணவன் கணேசமூர்த்தி யுவராஜனின் பூரணமான அனுசரணையுடன் பாடசாலையின் முகப்பு வாயில் அன்பளிப்பாக நிர்மானித்து வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் அதிதிகள் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், முன்வாயிலில் அதிதிகளால் திரை நீக்கம் செய்யப்பட்டு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
பின்னர் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் யாவும் நடைபெற்றதுடன், இதனை நிர்மானித்து தந்த பழைய மாணவன் க.யுவரஜன் என்பவர் பாடசாலை சமூகத்தினரால் பாராட்டப்பட்டு, நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
நீண்டகாலமாக குறித்த பாடசாலையில் முன் நுழைவாயில் மண்டபம் இல்லாத நிலை காணப்பட்டது. இதனை மாணவர்களின் நன்மை கருதி பாடைசாலையில் கல்வி கற்ற பழைய மாணவன் க.யுவராஜன் என்பவரிடம் விடுத்த வேண்டுகோளினை அடுத்து இவ் பாடசலை முன்வாயில் கலாச்சாரத்தை பிரதி பலிக்கும் வகையில் நேர்த்தியுடன் கட்டி முடிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வினை 2000, 2003ஆண்டு வாழைச்சேனை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள் ஒருங்கிணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.