மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பான நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 8ம் திகதி மட்டக்களப்பு – செங்கலடி பகுதிக்கு ஜனாதிபதியின் வருகையின் போது கொம்மாதுறை பகுதியில் – மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 30பேருக்கு எதிரான வழக்கு விசாரணை கடந்த(10)ஆம் திகதி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16ம்திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
10 ஆம் திகதி வழக்கு விசாரணையின் போது வழக்கில் தொடர்புடைய அனைவரும் மன்றுக்கு சமூகமளிக்காமையினால் அடுத்த வழக்கில் வழக்கில் தொடர்புடைய அனைவரையும் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற இரண்டு ஊடகவியலாளர்களுக்கும் எதிராகவும் இந்த வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.