கனடாவில் 25 வயது இந்தியர் ஒருவர் சிறுமிகள் மற்றும் பெண்களிடம் அத்துமீறியதாக கைது செய்யப்பட்டார்.
நியூ பிரன்ஸ்விக்கின் Moncton-யில் உள்ள பொது நீர் பூங்காவில் இளைஞர் ஒருவர் சிறுமிகள், பெண்களிடம் அத்துமீறியுள்ளார்.
குறித்த 25 வயது இளைஞர் தங்களை கட்டிப்பிடித்து தவறாக நடந்துகொண்டதாக 12 பேர் பொலிஸிடம் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து இந்தியரான குறித்த இளைஞரை பொலிஸார் அங்கேயே வைத்து கைது செய்தனர்.
அந்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவர் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 24ஆம் திகதி Moncton மாகாண நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் குற்றம்சாட்டப்பட்டவரின் விவரம் வெளிவராத நிலையில், அவர் பூங்காவில் இருக்கும் படங்கள் மற்றும் அவரை பொலிஸார் கைது செய்தது போன்ற படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
அதேசமயம் கனேடிய சட்டத்தின்படி அத்துமீறல், இளம்வயது பெண் அல்லது குழந்தையை தவறாக தொடுவது மற்றும் சுரண்டல் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.