இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு களுதாவளை அருள்மிகு சுயம்புலிங்க பிள்ளையார் ஆலய ஆனி உத்தர தீர்த்தோற்சவம் இன்று (12) காலை நடைபெற்றது.
முதலில் மூலமூர்த்தியாகிய சுயம்புலிங்க பிள்ளையாருக்கு பூஜைகள் இடம்பெற்று , பின்னர் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றதை தொடர்ந்து , சுவாமி உள்வீதி வலம்வந்து , ஆலய முன்றலில் அமைந்துள்ள தீர்த்தகேணியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ குருமாரின் வேத பாராயணம் ஒலிக்க , பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க ஆனி உத்தர தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
இதன்போது இலங்கையின் நாலா பக்கங்களில் இருந்து வருகை தந்து தமது நேர்த்திகளை நிறைவேற்றினர்.
இக் கிரியை நிகழ்வுகள் ஆலய பிரதம குரு வி.கு சிறிஸ்காந்த குருமார் தலையிலான குருமாரினால் இடம்பெற்றது.
இதன் போது பக்தர்கள் பால்காவடி ,பறவை காவடி நேர்த்திகளை நிறைவேற்றினர்.
இவ்வாண்டுக்கான அலங்கார உற்சவமானது கடந்த 3 ம் திகதி பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பமாகியமையும் குறிப்பிடத்தக்கது .