மட்டக்களப்பு சித்தாண்டியில் அடிப்படை வசதிகளற்ற வீடொன்றில் வசித்து வந்த குடும்பத்தினரின் நலன் கருதி புதிய வீடொன்றை நிர்மானித்து கொடுக்கும் முகமாக அடிக்கல் நடும் பணி நேற்று காலை (12) இடம்பெற்றது.
சித்தாண்டி 3 ஜச் சேர்ந்த 3 பிள்ளைகளைச் கொண்ட மா.செல்லத்துரை குடும்பத்தினருக்கு இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளது. இவர்களது வாழ்வாதார நிலைமைகள் தொடர்பாக சமூக வலைத்தளமொன்றில் விடயம் வெளி வந்ததை அறிந்த மாத்தாளையைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளர் 1.4 மில்லியன் ரூபா செலவில் இவ் மனித நேய உதவியினை இக் குடும்பத்தினருக்கு வழங்கியுள்ளார்.
இவ் வீடு கட்டுவதற்கான பொறியியல் நடவடிக்கைகளை இலங்கை இராணுவத்தின் கட்டட நிர்மாணப் பிரிவினர் இலவசமாக மேற்கொள்ளவுள்ளனர்.
கிழக்கு கமாண்டர் பாதுகாப்பு படை மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.குலதுங்கவின் ஒருங்கிணைப்பின் கீழ் 23 ஆவது காலால் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யு,பி.காரியவசம் பிரிகேடியர் ஆ.பி.எஸ்.பிரசாத் ஆகியோர்களின் வழிகாட்டுதலின் கீழ் 4 ஆவது இராணுவப் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர்.எஸ்.பி.ஜ.எச்.சேனநாயக்க அவர்களின் மேற்பார்வையில் 18113 சதுர அடியில் சகல வசதிகளுடனும் கூடிய வீடொன்று நிர்மானிப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
நேற்றைய நிகழ்வில் 232 ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் பிரசாத் சந்துனு பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.செங்கலடி பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.