அநுராதபுரத்தில் கல்னெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று (12) இரவு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கல்னெவ பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் கலங்குட்டிய பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு காணரமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்டவரது சடலம் நீதவான் விசாரணைகளுக்காக சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.