கடற்றொழிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி மறு அறிவித்தல் வரை வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடலைச் சுற்றியுள்ள கடற்பரப்பிற்கு கடற்றொழிலாளர்கள் செல்ல வேண்டாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த கடற்பரப்புகளில் காற்று மணித்தியாலத்துக்கு 70 – 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இதன்போது கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகக் கடற்றொழிலாளர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
