2023, 2024 பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கான பாடசாலை விண்ணப்பதாரர்கள் ஜூலை 29ஆம் திகதி வரை இணையவழியில் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
அனைத்து விண்ணப்பதாரர்களும் விண்ணப்பங்களை தங்களின் அதிபர்/ பாடசாலை பிரதானிகள் மூலமாகப் விண்ணப்பிக்க வேண்டும்.
அதன்படி, தனியார் பாடசாலைகளின் அதிபர்கள்/ பிரதானிகள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கைப்பேசி செயலியான ‘DOE’ க்கு பிரவேசித்து உரிய அறிவுறுத்தல்களை கவனமாக வாசித்து, பிழையின்றி இணையவழி முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.
மேற்படி பரீட்சைக்கு, அரசு மற்றும் தனியார் பாடசாலைகளின் அதிபர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
இப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை 2023 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் முதலாவதாகத் தோற்றிய மற்றும் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற GIT பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியாத மாணவர்களுக்கும், 2023 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பில் படித்த மாணவர்களுக்கும் மற்றும் 2024 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.