Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய நுழைவாயில் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனினால் திறந்து வைப்பு!

கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய நுழைவாயில் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனினால் திறந்து வைப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

நாட்டிற்காக நாங்கள் அர்ப்பணித்து செயலாற்ற முன்வரவேண்டும்.இல்லையென்றால் முன்னெடுக்கும் கடையடைப்பும் போராட்டங்களும் எதிர்கால குழந்தைகளையே பாதிக்கும் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின், 2024ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட புதிய நுழைவாயில் திறப்பு விழா மற்றும் பெயர்ப் பலகை திரைநீக்கம் செய்யும் நிகழ்வு நேற்று (15) மாலை பாடசாலை அதிபர் அருமைத்துரை தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சிவநேதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டு, நுழைவாயிலையத் திறந்து வைத்ததோடு, பாடசாலையின் பெயர்ப் பலகையினையும் திரைநீக்கம் செய்து வைத்தார்.

மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தின் இடப்பற்றாக்குறை தொடர்பில், இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திகாந்தனின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட நிலையில், உயர்கல்வி அமைச்சுக்கு சொந்தமான காணி பாடசாலைக்கு வழங்கப்பட்டு அவை புனரமைப்பு செய்யப்பட்டு மீள கையளிக்கப்பட்டது.

பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 79 வருடங்களுக்குப் பின்னர், பாடசாலையின் இடப்பற்றாக்குறை பூர்த்தி செய்யப்பட்ட நிலையில், விஸ்தரிக்கப்பட்ட பாடசாலை வளாகத்தில் பிரதான நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில், மதத் தலைவர்கள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு வலய பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கரணியா சுபாகரன், மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், வலயக் கல்வி அதிகாரிகள், கல்வியியலாளர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

அதிதிகள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதோடு, நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன. பாடசாலையின் பாண்ட் வாத்திய அணியினரும், சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாங்கள் அனைவரும் திட்டமிட்டு சரியாக செயலாற்றினால் அடுத்த மூன்று ஐந்து வருடங்களில் அனைவருக்கும் உயர்ச்சியும் சம்பள அதிகரிப்புகளும் முக்கியமாக இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கிக்கொள்ளமுடியும் எனவும் இங்கு உரையாற்றிய சந்திரகாந்தன் தெரிவித்தார்.

அனுபவம் இல்லாதவர்களின் கதைகளை கேட்டு அரசாங்கத்தின் கொள்கையினை சரியாக மதித்து நடக்க தவறினால் நாடு மீண்டும் அமிழ்ந்துவிடும்.அறிவுபூர்வமான வகையில் ஆசிரிய சங்கம் உட்பட தொழிற்சங்கங்கள் தீர்மானங்களை எடுத்து ஒத்துழைப்பினை அரசாங்கத்திற்கு வழங்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு
செய்திகள்

மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு

October 5, 2026
கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!
செய்திகள்

கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!

October 5, 2026
மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

October 5, 2026
“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு
செய்திகள்

“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு

October 5, 2026
கல்வியியல் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க புதிய நடவடிக்கை!
செய்திகள்

கல்வியியல் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க புதிய நடவடிக்கை!

October 5, 2026
ரஷ்யாவில் அடையாளம் காணப்படாத வைரஸ் அச்சம்; 200 பேர் தனிமைப்படுத்தல்!
உலக செய்திகள்

ரஷ்யாவில் அடையாளம் காணப்படாத வைரஸ் அச்சம்; 200 பேர் தனிமைப்படுத்தல்!

October 5, 2026
Next Post
வைத்தியர் அர்ச்சுனாவிற்கு நீதிமன்றத் தடைஉத்தரவு!

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு நீதிமன்றத் தடைஉத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.