சுற்றுலா மேம்பாட்டுத் திணைக்களத்திலிருந்து நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக பெசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று (17) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








