வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான குமுண தேசிய பூங்கா உடான காட்டுப்பாதை, கழுகுமலை பத்து பாடி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் முன்னிலையில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அனிருத்தனின் ஆலோசனைக்கமைவாக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி ஆகியோரின் ஏற்பாட்டில் இன்று (12.06.20232) இந்த காட்டுப்பாதை திறந்துவைக்கப்பட்டது.மிக நீண்ட பாதயாத்திரை அத்துடன் இம்முறை காட்டுப்பாதையூடாக சுமார் 45 ஆயிரம் பக்தர்கள் பாதயாத்திரையை மேற்கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்போது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.என்.டக்ளஸ், மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன், லாகுகலை பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா ,மொனராகலை மாவட்ட அரசாங்கஅதிபர் ,ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திஸாநாயக்க உள்ளிட்ட யாத்திரியர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இதற்கமைய முதல் நாளிலேயே சுமார் 2000 பாதயாத்திரிகர்கள் பயணித்ததுடன் யாழ்ப்பாணம் – செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பித்த ஜெயா வேல்சாமி தலைமையிலான மிக நீண்ட பாதயாத்திரையில் ஆயிரக்கணக்கான அடியார்களும் கலந்துகொண்டுள்ளார்கள்.
உகந்தையிலிருந்து 5 மைல் தூரத்தில் வாகூரவட்டை, பின்பு 7 மைல் தூரத்தில் குமுக்கனாறு ,12 மைல் தூரத்தில் நாவலடி, 11 மைல் தூரத்தில் வியாழை, 6 மைல் தூரத்தில் வள்ளி அம்மன் ஆறு, 8 மைல் தூரத்தில் கட்டகாமம், 8 மைல் தூரத்தில் கதிர்காமம் மொத்தமாக காட்டுப்பாதை 56 மைல்களை உள்ளடக்கியுள்ளது. சுமார் 6 நாட்கள் இந்த பயணத்தை அடியார்கள் மேற்கொள்வது வழமையாகும்.
மேலும் இன்று திறக்கப்பட்ட காட்டுப்பாதை இம் மாதம் 25 ஆம் திகதி மூடப்படுவதுடன் கதிர்காம கொடியேற்றம் எதிர்வரும்19 ஆம் திகதி நடைபெறுவதுடன் எதிர்வரும் ஜீலை மாதம் 04 ஆம் திகதி தீர்த்தம் இடம்பெறும்.செல்வச்சந்நிதி இதேவேளை நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்க்கான பாதயாத்திரையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமம் வரையான பாதயாத்திரை இன்று (12.06.2023) காலை 8 மணியளவில் ஆரம்பமாகியது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ்.மாவட்ட பணிப்பாளர் தலைமையில் இடம்பெறும் இந்த யாத்திரை சந்நிதியான் ஆலய பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிர்வாக பணிப்பாளர் மனுர சமன் பெரேர, வடமாகாண பணிப்பாளர் காமினி யாழ்.மாவட்ட பணிப்பாளர் வினோதினி சிறிமேனன், வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் ஆழ்வாப்பிள்ளை சிறி, மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு சம்பிர்தாயபூர்வமாக யாத்திரையை ஆரம்பித்து வைத்துள்ளனர்.
குறித்த யாத்திரிகர்கள் உகந்தை முருகன் ஆலயம் சென்று அங்கிருந்து சுமார் 300 இளைஞர்கள், யுவதிகள் நாடளாவிய ரீதியிலிருந்து யாத்திரை செல்லவுள்ளனர்.
இதில் இளைஞர் சேவை மன்றங்களின் நிர்வாகிகள், கிராம சேவகர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.