ஒட்டுக்குழு தொடர்பில் பேசியபோது பிள்ளையான் இவ்வாறான கருத்துகளை வெளியிடுவது வேடிக்கையான விடயமாகும். பிள்ளையானால் முடியுமானால் இன்றுகூட சென்று யார் ஆயுதம் கேட்டது, எப்போ கேட்டது என்பது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யமுடியும் என இலங்கை அரச ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
மட்டு ஊடக அமைய சந்திப்பில் கலந்து கொண்ட அவர் மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
பிள்ளையானிடம் ஜேவிபி ஆயுதம் கேட்டிருந்தால் பிள்ளையான் அந்த காலத்திலேயே சென்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை செய்திருக்கமுடியும். அநுரகுமார திசாநாயக்க மட்டக்களப்பில் பிள்ளையானின் ஒட்டுக்குழு தொடர்பில் பேசியபோது பிள்ளையான் இவ்வாறான கருத்துகளை வெளியிடுவது வேடிக்கையான விடயமாகும்.
பிள்ளையானால் முடியுமானால் இன்றுகூட சென்று யார் ஆயுதம் கேட்டது, எப்போ கேட்டது என்பது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யமுடியும்.
இப்போது பிள்ளையான் ரணில் விக்ரமசிங்கவுடன் உள்ளார். ரணில்விக்ரசிங்கவிடம் சென்று கூறி பொலிஸ் மூலம் இது தொடர்பில் விசாரணை நடாத்த முடியும். இலங்கையில் சட்ட விரோதமாக எவர் ஆயுதம் வைத்திருந்தாலும் அந்த ஆயுதங்கள் களையப்படவேண்டும்.
பாதாள உலக குழுக்கள், போதைப்பொருள் வியாபாரிகள் அழிக்கப்படவேண்டும். தமிழ்,சிங்கள,முஸ்லிம் மக்கள் எந்தவித அச்சமின்றிய சூழ்நிலையில் பேதங்கள் அற்றுவாழும் நிலைமை ஏற்படுத்தப்படவேண்டும்.
இந்த அரசாங்கம் இந்த வருட வரவு செலவு திட்டத்தில் 44பில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளதாக சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். சந்திப்புக்களில் எல்லாம் இவற்றினை அவர் எங்களிடம் தெரிவித்தார். அது உண்மையில் பச்சைப்பொய் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இந்த அரசாங்கம் எந்த பிரச்சினைக்கும் தீர்வினை வழங்கப்போவதில்லையென்பது தெளிவாக விளங்குகின்றது. இவ்வாறு பிரச்சினையிருக்கும்போது அதிபர்,ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு செய்வது என்றால் வட் வரியை அதிகரிக்கவேண்டும் என்று புதிய ஜனாதிபதி கருத்தினை கூறுகின்றார்.
அரசாங்கத்துடன் இணைந்துள்ள அரசியல்வாதிகளினை பாதுகாக்காமல் அவர்களிடமிருந்து ஊழல் செய்த பணத்தினை மீட்டால் எங்களிடமிருந்து வரி அறவிடவேண்டிய அவசியம் இல்லை.
இந்த அரசாங்கம் மக்கள் மீது வரிச்சுமையினை கொண்டுவரவே முற்படுகின்றதே தவிர பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. மக்களின் பிரச்சினைகளுக்கு முடிவினை காணமுடியாத, படைகளை வைத்து அச்சுறுத்தல் செய்யும் இந்த அரசாங்கத்தினை அடித்துவிரட்டவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதேசமயம் இந்த ரணில்ராஜபக்ஸ அரசாங்கம் எதிர்காலத்திலும் இந்த பிரச்சினைக்கு தீர்வினை வழங்காமல் ஆசிரியர்கள், அதிபர்களுக்கு எதிராகவும், அரச ஊழியர்களுக்கு எதிராகவும் கொண்டுசெல்லும் அச்சுறுத்தும் பழிவாங்கள் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், எதிர்வரும் 22ஆம் திகதியிலிருந்து இரண்டு வாரங்களுக்கு சட்டப்படி கற்பித்தல் செயற்பாடுகள் மட்டும் முன்னெடுக்கப்படும் என்பதுடன் அலுவலக பணிப்புரைகளை புறக்கணித்து 7.10 மணி தொடக்கம் 1.10மணி வரையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபடுவோம் என மேலும் அறிவித்துள்ளனர்.