கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்திலே வரலாற்றுத் தன்மை வாய்ந்த பல இடங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் இவற்றுள் மட்டக்களப்பு கோட்டை முக்கியத்துவம் பெறுகின்றது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலக கோட்டையின் உள்ளே அமைந்திருந்த நிலையில், தற்போது அது வெறொரு இடத்திற்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து இந்த கோட்டையானது சுற்றுலா தலமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கோட்டையானது ஒல்லாந்தர் மற்றும் போர்த்துக்கேயர் ஆட்சிக்காலங்களில் பல்வேறுப்பட்ட பரிணாமங்களுடன் வளர்ச்சிப்பெற்ற நிலையில், தற்போது அது இலங்கையின் வரலாற்று சின்னமாக காணப்படுகிறது.
இவ்வாறு பல சிறப்புக்களை கொண்ட மட்டக்களப்பு கோட்டையினை இனி அனைவரும் சென்று பார்வையிடலாம்.