நேபாள தலைநகர் காத்மாண்டு அருகே 19 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
காத்மாண்டு, திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சவுரியா ஏர்லைன்ஸ் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஓடுதளத்தில் சென்றுகொண்டிருந்த கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையில் சறுக்கி விபத்திற்குள்ளானதில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
விமானத்தில் இருந்த 19 பேரில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒரு விமான ஓட்டி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என சர்வதேச செய்திகள் தகவல் தெரிவிக்கின்றன.
விமான விபத்தை அடுத்து காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அதேசமயம் விமானத்தில் பயணித்தவர்கள் சவுர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த 17 பேர் மற்றும் 2 விமானிகள் என் மேலும் தெரிவிக்கப்படுகிறது.