புத்தளம் – கருவலகஸ்வெவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொன்வெவ பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருவலகஸ்வெவ காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று (24) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தப்போவ பகுதியில் வசிக்கும் 67 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.