Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மக்கள் காணியில் பௌத்த விகாரை அமைக்க பிக்கு தலைமையிலான குழுவினர் முயற்சி; திருமலையில் மக்கள் கேள்வி!

மக்கள் காணியில் பௌத்த விகாரை அமைக்க பிக்கு தலைமையிலான குழுவினர் முயற்சி; திருமலையில் மக்கள் கேள்வி!

2 years ago
in செய்திகள்

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலந்தைக்குளம் பகுதியில் இரவோடு இரவாக பௌத்த விகாரை அமைப்பதற்காக காணி துப்பரவு செய்யப்பட்டதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குச்சவெளி – இலந்தைக்குளம் 5 ஆம் கட்டைப்பகுதியில் நேற்று வியாழக்கிழமை (25) இரவில் இருந்து பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் பௌத்த விகாரை அமைப்பதற்காக மக்களுடைய காணி துப்பரவு செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வயலுக்கு சென்ற மக்களால் குறித்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை அவதானிக்கப்பட்டு மக்களுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, இன்று வெள்ளிக்கிழமை (26) குச்சவெளி பிரதேச செயலாளரின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இலந்தைக்குளம் பகுதியில் காலாகாலமாக வாழ்ந்து வந்த மக்கள் யுத்தத்தின் காரணமாக 1990ஆம் ஆண்டு மற்றும் அதனை அண்டிய காலப்பகுதிகளில் இடம்பெயர்ந்திருந்ததாகவும், அப்பகுதியில் மீள குடியமர்வதற்கான கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நீண்டகாலமாக முன்வைத்துவருவதாகவும் இந்நிலையில் தற்போது அப்பகுதி ஆக்கிரமிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

குறித்த பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான பிறப்பு அத்தாட்சி பத்திரம், இறப்பு அத்தாட்சிப் பத்திரம், காணி ஆவணங்கள் உட்பட உடைந்த பாடசாலைக் கட்டடம் மற்றும் அரச கட்டடங்களும் இன்னும் ஆதாரங்களாக காணப்படுவதாகவும், வயல் வரம்புகளும் இன்னும் அழியாமல் காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மண்வெட்டிக்காக பிடிக்கம்பு வெட்டினாலே கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கும் அரச திணைக்களங்கள் பாரிய இயந்திரங்களினாலும், இயந்திர கை வாள்களினாலும் பாரிய பச்சை மரங்களை வெட்டி அழிப்பதற்கு எதிராக ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Tags: BattinaathamnewssrilankanewsTrinconews

தொடர்புடையசெய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்
செய்திகள்

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

June 6, 2026
நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!
செய்திகள்

நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!

June 6, 2026
டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!
செய்திகள்

டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!

June 6, 2026
Next Post
குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர்களால் பதற்றம்!

குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர்களால் பதற்றம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு