Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2024 – பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்!

2024 – பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

33ஆவது ஒலிம்பிக் போட்டிகள் – 2024 பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளன.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர் வீராங்கனைகள் பங்குபற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், பிரான்ஸில் ஒலிம்பிக் போட்டியை நடத்தக்கூடாது என்று கூறி ஒரு தரப்பினர் அந்நாட்டில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்கள் ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்டவற்றின் மீது தாக்குதல் நடத்தியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் பாரிஸ் நகருக்கு செல்ல முடியாமல் அவதியுற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்பின்னர், பொலிஸார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததும், ஏராளமான மக்கள் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா அணிவகுப்பு நடைபெறும் சீன் நதிக்கரையில் ஒன்று கூட ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன், பாரிஸ் நகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் 45,000 பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, அணிவகுப்பில் மொத்தம் 205 நாடுகளைச் சேர்ந்த 6800 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றினர். இதில் முதல் நாடாக க்ரீஸ் இடம்பெற்றுள்ளது.

இந்த அணிவகுப்பில் இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்றுள்ள பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் கொடியை ஏந்திச் சென்றுள்ளனர்.

அணிவகுப்பைத் தொடர்ந்து தொடக்க விழா நிறைவு நிகழ்ச்சிகள் டொரக்கடேரோ என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் பிரபல அமெரிக்க பாப் பாடகி லேடி காகா மேடையில் தோன்றி பாடல் பாடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வானவேடிக்கைகளுடன் கூடிய கண்கவர் நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு நாட்டிலிருந்தும் வருகை தந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற்றும் வீரர்கள் படகுகளில் அணிவகுத்து சென்ற போது இலங்கை வீரர்களும் அதில் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை வீரர்கள் வெற்றிபெற எமது வாழ்த்துக்கள்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!
செய்திகள்

மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!

September 5, 2026
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026
துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தல்; மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது!
செய்திகள்

துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தல்; மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது!

September 5, 2026
லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு; புதிய விலைகள் அறிவிப்பு!
செய்திகள்

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு; புதிய விலைகள் அறிவிப்பு!

September 5, 2026
இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!
செய்திகள்

இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!

September 5, 2026
குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
Next Post
வாக்காளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!

வாக்காளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு