பிரியாணி மேன் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் அபிஷேக் ரவி என்பவரை, தமிழக சைபர் கிரைம் பொலிஸார் கைது செய்துள்ளனர். பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல யூடியூபர் இர்ஃபான் மற்றும் பெண் யூடியூபர்களை பற்றி, பிரியாணி மேன் வெளியிட்ட வீடியோக்கள் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அதே சமயம் கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல யூடியூபரான இர்ஃபான் மீது பொய் குற்றச்சாட்டுகள் முன்வைத்ததாகவும், பெண்ணொருவரின் யூடியூப் சேனல் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைத்து இவர் காணொளியும் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இவர் வெளியிட்ட காணொளியின் உண்மை தன்மை தொடர்பில் இன்னுமொரு யூடியூப் சேனல் ஆனா எ2டி (A2D) இவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என ஆதாரத்துடன் நிரூபித்திருந்தமையும், இந்த நிலையில் பிரியாணி மேன் அபிஷேக் யூடியூப் நேரலையில் தற்கொலைக்கு முயன்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.