Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸ் அதிகாரி போல் நடித்து பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வந்த முன்னாள் இராணுவ வீரர் கைது!

பொலிஸ் அதிகாரி போல் நடித்து பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வந்த முன்னாள் இராணுவ வீரர் கைது!

2 years ago
in செய்திகள்

இலங்கையில் பொலிஸ் உத்தியோகத்தர் போல் நாடகமாடி பெண்களை அச்சுறுத்தி தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து, தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் இராணுவ சிப்பாய் மற்றும் அதற்கு உதவி செய்த ஒருவரை கெஸ்பேவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் விசாரணையில் குறித்த சந்தேக நபர் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி போலி பொலிஸ் அடையாள அட்டையையும் தயாரித்துள்ளது தெரியவந்துள்ளது.

பாணந்துறை பகுதியில் உள்ள பிரபல ஆடை விற்பனை நிலைய பெண் ஊழியர் ஒருவர் கடந்த 14ஆம் திகதி தனது காதலனை சந்தித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது முச்சக்கரவண்டியில் வந்த நபர் ஒருவர் அந்த முச்சக்கரவண்டியில் வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார்.

இதன்படி முச்சக்கரவண்டியில் ஏறி சிறிது தூரம் சென்ற போது பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் பொலிஸ் அடையாள அட்டையை காட்டியுள்ளார்.

இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர், குறித்த பெண்ணிடம் தாம் விபச்சாரத்தில் ஈடுபடுவது தொடர்பில் அனைத்துத் தகவலையும் கண்டுபிடித்துவிட்டதாக கூறி மிரட்டியுள்ளார்.

பின்னர், அவளை பல்பொருள் அங்காடிக்கு அருகில் அழைத்துச் சென்று, அவள் அணிந்திருந்த நகை, இரண்டு பென்டன்ட்கள் மற்றும் வளையல்களை வலுக்கட்டாயமாக கழற்றிவிட்டு, அவளது ஏடிஎம் கார்டிலிருந்து 150,000 ரூபாவை எடுத்துக்கொண்டு பிலியந்தலை மொரட்டுவ வீதியிலுள்ள விடுதிக்கு அழைத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணை விடுதிக்கு அழைத்துச் செல்வது சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது. பின்னர் பிலியந்தலை நகருக்கு அழைத்து வந்து வேறு முச்சக்கரவண்டியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தை எதிர்கொண்ட ஆடைத் தொழிலாளியான பெண் கடந்த 15ஆம் திகதி கெஸ்பேவ பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், சந்தேகநபர் தம்மை பாலியல் வன்கொடுமை செய்து நிர்வாண புகைப்படங்களை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் வழங்கிய முச்சக்கர வண்டியின் பதிவு இலக்கத்தின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், முச்சக்கரவண்டியின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் ஹொரணை பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

விசாரணைகளுக்கு அமைய, படுவந்தர, லுல்வல பிரதேசத்தில் வைத்து சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை பொலிஸாரால் கைது செய்தனர்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் 57 வயதான முன்னாள் இராணுவ வீரர் என்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து போலி பொலிஸ் அடையாள அட்டை, ஐஸ் போதைப்பொருள், நடிகை உட்பட 5 பெண்களின் தேசிய அடையாள அட்டை, ஆண் ஒருவரின் தேசிய அடையாள அட்டை, 18 சிம் அட்டைகள், 5 ஸ்மார்ட் கைப்பேசிகள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், சந்தேகநபருக்கு உதவி புரிந்த முச்சக்கரவண்டி சாரதியும் முச்சக்கரவண்டியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு ஆண்டிற்கு முன்னர் தனது கடமை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட எஹலியகொட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் நிலைய பொறுப்பதிகாரி பிரியங்க சில்வாவின் புகைப்படத்தை சந்தேக நபர் போலி பொலிஸ் அடையாள அட்டைக்காக பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதில் பொலிஸ் பரிசோதகர் அஜித் டி சில்வா என குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபரின் கைப்பேசியை பரிசோதித்த போது, ​​ஆடைத் தொழிலாளி மற்றும் பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட காணொளி காட்சிகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் போல் நடித்து பல பெண்களை ஏமாற்றி, மிரட்டி தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்ததும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும் தெரியவந்தது.

தாம் கொள்ளையடிக்கும் பணத்தை நடிகைகள் மற்றும் அழகான பெண்களை வைத்துச் செலவு செய்வதாகவும், அவர்களுடனான தனது உடலுறவை கையடக்கத் தொலைபேசியில் படம்பிடிப்பதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் கெஸ்பேவ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், அவரது மோசடிகளில் சிக்கியவர்கள் உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்

September 4, 2026
21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்
உலக செய்திகள்

21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்

September 4, 2026
வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!
உலக செய்திகள்

வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!

September 4, 2026
“தமிழரசு கட்சி கூப்பிட்ட இடத்தில் குந்துகின்ற கட்சி அல்ல”; சி வி கே சிவஞானம்
அரசியல்

“தமிழரசு கட்சி கூப்பிட்ட இடத்தில் குந்துகின்ற கட்சி அல்ல”; சி வி கே சிவஞானம்

September 4, 2026
மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு
செய்திகள்

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

September 4, 2026
Next Post
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லியன் கணக்கில் மோசடி செய்த 16 அதிகாரிகள்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லியன் கணக்கில் மோசடி செய்த 16 அதிகாரிகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.