புற்றுநோய் அபாயத்தை முன்கூட்டியே கணித்துவிடும் ஏஐ மாடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனில் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence – AI) தொழில்நுட்பத்தின் மூலம் மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப மையத்தின் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Computer Science And Artificial Intelligence Laboratory – CSAIL) மற்றும் ஜமீல் க்ளினிக் ஃபார் மெஷின் லெர்னிங் ஐ சேர்ந்த ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ளனர்.
மிராய் (MIRAI) என அழைக்கப்படும் இந்த சிஸ்டம் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் பாதிப்பை எக்ஸ்-ரே அல்லது மாமோகிராம் பரிசோதனை மூலமாகவே கணித்து அறியத் தரும்.
அதாவது, இந்த தொழில்நுட்பம் நோயாளர்களின் உடல்நிலையின் எதிர்கால மாற்றத்தை கணிக்கும் திறன் கொண்டுள்ளது.
மசாசுசெட்ஸ் பொது மருத்துவமனையில் இரண்டு இலட்சம் நோயாளர்களிடம் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.