Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் தனிமையிலிருந்த வயோதிப பெண்மீது தாக்குதல்!

யாழில் தனிமையிலிருந்த வயோதிப பெண்மீது தாக்குதல்!

9 months ago
in செய்திகள்

யாழ். வடமராட்சி பகுதியில் தனிமையிலிருந்த பெண்மீது இனந்தெரியாத நபர்கள் சரமாரியான தாக்குதல் நடாத்தியதுடன் அவரது காதிலிருந்த தோடு மற்றும் பத்தாயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையிட்டுச் சென்றதுடன் அவர்களது காணிகளின் உறுதிப் பத்திரங்களையும் தீயிட்டுக் கொழுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் நேற்றையதினம் (01) அதிகாலை வடமராட்சி கிழக்கு குடத்தனை மேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

வீட்டில் தனிமையில் உறங்கிகொண்டிருந்தவேளை கதவை உடைத்து முகமூடி அணிந்து உள்ளே நுழைந்த இனந்தெரியாத நபர்கள் 68 வயதுடைய வயோதிப் பெண்மீது தாக்குதல் நடாத்தி காரிலிருந்த தங்க தோடு, தாலி ஆகியவற்றையும் கொள்ளையிட்டதுடன் அவரிடம் இருந்த 10,000 ரூபா பணத்தையும் பறித்தெடுத்ததுடன் அவர்களது காணிகளின் உறுதி பத்திரங்களையும் கோரியுள்ளனர்.

குறிப்பாக சமீபத்தில் கொள்வனவு செய்த காணியின் உறுதிப் பத்திரத்தையும் கோரியுள்ளனர்.

அப்போது அச்சத்தில் வயோதிப பெண் உறுதிப் பத்திரத்தை காண்பிக்க அதனை தீயிட்டு கொழுத்தியதுடன் அவரது பாவனை உடுபுடவைகளையும் தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.

மேலும் குறித்த முதிய பெண்மணி சமீபத்தில் கொள்வனவு செய்த காணியில் புதிதாக வீடு ஒன்றை நிர்மாணிக்கும் பணிகள் இடம் பெறுவதாகவும், அதற்கான பணம் எங்கே இருக்கிறது என்றும் கேட்டு மிரட்டியுள்ளனர்.

அதற்கு அவர் இருந்த காசில்தான் கற்களை பறித்து வேலை செய்யத்தொடங்கியுள்ளோம் என்றும் கூற பொய் சொல்வதாக கூறி தாக்கியுள்ளனர்.

குறித்த வயோதிப பெண் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார்.

இவ்வாறான நிலையில், புதிதாக கொள்வனவு செய்த காணியில் இரவுக் காவலிற்க்காக தங்கியிருந்த கணவர் அதிகாலை 5 மணிபோல் வீட்டிற்க்கு வந்தபோது தனது மனைவி இரத்த காயங்களுடன் கிடந்ததை கண்டு உடனடியாக அயலவர் உதவியுடன் தனது மனைவியை மீட்டு பருத்தித்துறை அதார வைத்தியசாலையில் அனுமதுத்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்; பலர் உயிரிழப்பு
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்; பலர் உயிரிழப்பு

May 12, 2025
மின்சார சபை தலைவர் பதவி விலகவில்லை என அமைச்சு மறுப்பறிக்கை
செய்திகள்

மின்சார சபை தலைவர் பதவி விலகவில்லை என அமைச்சு மறுப்பறிக்கை

May 12, 2025
ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு
செய்திகள்

ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

May 12, 2025
பதுளை மாவட்டத்தில் சடுதியாக அதிகரித்த காய்கறிகளின் விலை
செய்திகள்

பதுளை மாவட்டத்தில் சடுதியாக அதிகரித்த காய்கறிகளின் விலை

May 12, 2025
இரு பஸ்கள் மோதி விபத்து ; நான்கு பேர் காயம்
செய்திகள்

இரு பஸ்கள் மோதி விபத்து ; நான்கு பேர் காயம்

May 12, 2025
தமிழ் இன அழிப்பு வாரம் இன்று மட்டு சத்துருக்கொண்டான் நினைவுத்தூபி அருகில் ஆரம்பம்
காணொளிகள்

தமிழ் இன அழிப்பு வாரம் இன்று மட்டு சத்துருக்கொண்டான் நினைவுத்தூபி அருகில் ஆரம்பம்

May 12, 2025
Next Post
நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பான வர்த்தமானி!

நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பான வர்த்தமானி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.