கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தை குழப்பும் முயற்சியில் ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் திரைமறைவில் செயற்பட்டு வருவதாக கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் டாக்டர் அல்ஹாஜ் எஸ். எம். ஏ அஸீஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் நேற்று (02) மாலை நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பெயரால் புதிய நிருவாக சபை சட்டவிரோதமாக செயற்பட முயற்சி செய்கின்றது.
இன்று வரை நாங்கள் தான் இந்த கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் மற்றும் நம்பிக்கையாளர் சபையினர், புதிய நிருவாக சபை பதவியேற்றலின் அடாத்தாக எம்மை அச்சுறுத்த வருகின்றார்கள்.அவர்களுக்கு எதிராக காவல் நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு முறைப்பாடு செய்துள்ளேன்.
எமது நிர்வாகம் மீது குற்றச்சாட்டுக்கள் ஊழல் காரணமாக இரு பள்ளிவாசல்களுக்கும் என புதிதாக 22 பேர் கொண்ட நம்பிக்கையாளர் நியமனப் பத்திரத்தை 2024.07.24 அன்று முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (வக்கு பகுதி) வழங்கி இருப்பதனை நாம் இதுவரை ஏற்கவில்லை.மக்களும் அவ்வாறான ஒரு கருத்தில் தான் உள்ளனர்.
இங்கு ஞானசார தேரர் மற்றும் இதர தரப்பினர் எமது நிர்வாகத்தை குழப்புவதற்கு முயல்கின்றனர்.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இவ்வாறான குழப்ப நிலை ஏற்படுவது வீண் சந்தேகத்தை எம் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டடார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பள்ளிவாசல்களில் கல்முனை முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல்களின் நிர்வாகம் மீது குற்றச்சாட்டுக்கள் ஊழல் காரணமாக இரு பள்ளிவாசல்களுக்கும் புதிதாக 22 பேர் கொண்ட நம்பிக்கையாளர் நியமனப் பத்திரத்தை 2024.07.24 அன்று முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (வக்கு பகுதி) வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது.
இதற்கமைய புதிய நம்பிக்கையாளர் சபை குழுவினர் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளும் பொருட்டு ஊடக சந்திப்பின் ஊடாக பொதுமக்களுக்கு இன்று அறிவித்ததுடன் குறித்த பள்ளிவாசலுக்கு சென்று அங்கு பொதுமக்களை சந்தித்து தொழுகை மேற்கொண்டு புதிய நம்பிக்கையாளர் நியமனம் தொடர்பில் தெளிவாக விளக்கங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.