Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; மட்டு நகரில் முகவர் தலைமறைவு!

வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; மட்டு நகரில் முகவர் தலைமறைவு!

3 years ago
in மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாகக் கூறி மட்டக்களப்பில் பலரிடம் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாவை வாங்கி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலைய உரிமையாளர் தலைமறைவாகியுள்ள நிலையில் அடுத்து கைது செய்யப்பட்ட முகாமையாளரை எதிர்வரும் 19ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பீற்றர் போல் நேற்று புதன்கிழமை (14) உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது மட்டக்களப்பு நகர் திருகோணமலை வீதியில் அமைந்துள்ள சட்டவிரோத வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றின் உரிமையாளரும் அவரின் முகாமையாளர் மற்றும் சப் முகவர்கள் இணைந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை பெற்று தருவதாக தெரிவித்து பல பேரிடம் சுமார் ஒரு கோடியே 80 இலச்சம் ரூபா பணத்தை மோசடியாக பெற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் சிலர் குறித்த முகவர் நிலையத்தின் சப் ஏஜன்சி மூலமாவும், முகவர் நிலைய உரிமையாளரிடம் நேரடியாகவும், சிலர் முகாமையாளர் ஊடாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக பல இலச்சம் ரூபா பணத்தை வழங்கிய நிலையில் அவர்களில் சிலரை வேலைக்கு அனுப்புவது போல சுற்றுலா விசாவில் துபாய் மற்றும் கட்டார் நாட்டுக்கு அனுப்பியுள்ள நிலையில் அவர்கள் அங்கு சென்று தொழில் இல்லாது கைவிடப்பட்டு நடுவீதியில் நிர்கதியான நிலையில் தங்களது உறவினருடன் தொடர்பு கொண்டு அவர்கள் தமது சொந்த பணத்தை செலுத்தி விமான சீட்டை பெற்றுக் கொண்டு சிலர் நாடு திரும்பியுள்ளனர், சிலருக்கு இன்று ஓமான் நாட்டில் வழக்கு நடப்பதாகவும் அறியமுடிகிறது.

நாடு திரும்பியவர்கள் வெளிநாட்டு வேலை பெற்றுதருவதாக கூறி ஏமாற்றிய சப் ஏஜன்டுக்களுக்கு மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் இரு சப் ஏஜன்ட்டுக்களை கடந்த மாதம் பொலிஸ் கைது செய்திருந்தது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாகக்கூறி சுமார் ஒருவரிடம் 6 இலச்சம் ரூபாவரை பணத்தை பெற்றுக் கொண்டு அவர்களை மட்டக்களப்பிலுள்ள பிரதான வெளிநாட்டு முகவர் ஊடாக வெளிநாட்டுக்கு அனுப்பியதாக தெரியவந்ததையடுத்து அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அந்த பிரதான முகவர் நிலையம் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு பொலிசார் அறிவித்த நிலையில் இது சட்டவிரோதமாக இயங்கிவருவதாக தெரியவந்தள்ளது. இந்த நிலையில் அங்கு கடமையாற்றிவந்த முகாமையாளர் 4 இலச்சம் ரூபாவுக்கு அதிகமாக பணத்தை மோசடியாக பெற்றுள்ளதாக இருவர் கடந்த செவ்வாய்க்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து அவரை நேற்று கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சித்தாண்டி, கொக்கட்டிச்சோலை, வாழைச்சேனை,புன்னைச்சோலை போன்ற பல பிரதேசங்களிலுள்ள பலரிடம் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக தானும் ஏனை சப் ஏஜன்சிகாரர்களும் பல இலச்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு அதனை முகவர் நிலைய உரிமையாளரிடம் வழங்கியுள்ளதாகவும்,
இந்த முகவர் நிலைய உரிமையாளர் வெளிநாட்டு வேலை பெற்று தருவதாக பலரிடம் சுமார் ஒரு கோடியே 80 இலச்சம் ரூபா வரை பெற்றுள்ளதாகவும், அவர் கொக்கட்டிச் சோலை முனைக்காட்டைச் சேர்ந்தவர் எனவும், தற்போது அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட முகாமையாளரை நேற்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 19 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த முகவர் நிலைய உரிமையாளர், முகாமையாளர் மற்றும் அந்த முகவர் நிலையத்தின் சப் ஏஜென்சி காரர்களுக்கு எதிராக இதுவரை சுமார் 50 இலச்சம் பண மோசடி தொடர்பாக 15 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

அதேசமயம் மட்டக்களப்பு புன்னைச்சோலையில் உள்ள இளைஞனையும் வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி ஓமானுக்கு அழைத்துச்சென்று நடுவீதியில் விட்டுச்சென்றுள்ளதால் அங்கு பொலிசாரிடம் தஞ்சமடைந்துள்ள குறித்த நபருக்கு இன்று ஓமானில் நீதிமன்ற வழக்கு நடைபெறுவதுடன் மேலும் இது குறித்த விசாரணையில் மலையாளி ஒருவர் சம்மந்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!

June 9, 2026
பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!
செய்திகள்

பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!

June 9, 2026
திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!
செய்திகள்

திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!

June 9, 2026
ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி

June 9, 2026
தொல்பொருள் மதிப்புள்ள புத்தர் சிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது
செய்திகள்

தொல்பொருள் மதிப்புள்ள புத்தர் சிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது

June 9, 2026
மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
செய்திகள்

மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

June 9, 2026
Next Post
மாநாட்டுக்காக பிரித்தானியா சென்ற பொலிஸாரை காணவில்லை!

மாநாட்டுக்காக பிரித்தானியா சென்ற பொலிஸாரை காணவில்லை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.