யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
எனினும், வழக்கு விசாரணைக்காக பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
இதனைத் தொடர்ந்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் வகையில் பிடியாணை பிறப்பித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் நீதிமன்ற நடைமுறைகளுக்கு அமைய முன்னெடுக்கப்படவுள்ளன.








