நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் தன் மீது சுமத்தப்பட்ட இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் தாம் அரசியலில் இருந்து விலகுவதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“சாணக்கியன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தி அதனூடாக அரசியல் செய்து தன்மீது கரை பூச துடிக்கின்றார்.
தமது பிரத்தியேக செயலாளர் மற்றும் உதவியாளர் இலஞ்ச ஊழல் அதிகாரிகளினால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்லடி கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பில் தனியார் ஊடகங்களுக்கு தமது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இராசமாணிக்கம் சாணக்கியன் சம்பவ தினமான அன்று நானும் அங்கு இருந்ததாகவும், இலஞ்ச ஊழல் அதிகாரிகள் வருகைத்தந்திருந்த வேலை அங்கிருந்து தாம் முச்சக்கர வண்டி ஒன்றில் தப்பி சென்றதாக பகிரங்கமாக பொய் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ள அவர் இதனை வைத்து அரசியல் இலாபமும் கான துடித்து வருகின்றார்.
அவ்வாறு தாம் எவரிடமும் இலஞ்சம் வாங்கவில்லை. இலஞ்ச ஊழல் ஆணைக் குழு அதிகாரிகள் கடமையில் இருக்கும்போது தாம் அவ்விடத்தில் இருக்கவில்லை. தனது மெய்ப்பாதுகாவலர் மூலம் அதனை தன்னால் நிரூபிக்க முடியும். குறித்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தி, திரிபுபடுத்திய கருத்துக்களை வெளியிட்ட சாணக்கியன் குறித்த சம்பவத்தின் போது தான் இருந்ததை நிரூபித்து காட்டினால் தான் அரசியலில் இருந்து முற்றாக விடை பெறுகின்றேன் .
அவ்வாறு நிரூபிக்காவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அரசியலில் இருந்து விடை பெறுவாரா?
தாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை செய்து வருவதினை பொறுக்க முடியாத சாணக்கியன் பொய்களை மாத்திரம் கூறி அரசியல் செய்துவரும் நிலையில், தன்னை பற்றி அவதூறு கூறுவதற்கு எந்த வகையிலும் தகுதி இல்லாதவர் என கூறியுள்ளார்.
அதேசமயம் மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் மாத்திரம் 80% மான மண் மாபியாக்கள் இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்தவர்கள் எனவும், மிக விரைவில் அர்களுடைய பெயர் விபரங்களை தான் வெளியிடப்போவதாகவும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கடந்த வருடம் (2023) ஊடகம் ஒன்றின் நேர்காணலில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமையும் மேலும் குறிப்பிடத்தக்கது.