வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் ஒட்டுமொத்தமாக அனைவரும் ஒன்று இணைந்து சஜித் பிரேமதாசா அவர்களுக்கு வாக்களிப்பதாக உறுதியளித்திருக்கின்றார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் த.தயானந்தன் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலின் போது பிரச்சாரங்களை முன்னெடுக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட முதல் தேர்தல் காரியாலயம் கிரான்குளம் பகுதியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவின் தேர்தல் செயற்பாட்டினை நோக்காக கொண்டு இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும் மாவட்ட தேர்தல் ஒருங்கிணைப்பாளருமான த.தயானந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்திருந்தனர்.
காரியாலயம் திறந்துவைக்கப்பட்டதனை தொடர்ந்து ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எதிர்கால செயற்பாடுகள் எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட உயர் மட்ட குழுக்களுக்கிடையிலான கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் தயானந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
கடந்த காலத்தை பொருத்தவரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டிலே ஒரு பாராளுமன்ற உறுப்பினரை கூட பெற முடியாத சந்தர்ப்பத்தில் எவ்வாறு ஜனாதிபதியாக வர முடியும் என்கின்ற கருத்து காணப்படுகின்றது.
எனவே இந்த நாட்டு மக்கள் உண்மையில் எதிர்பார்த்து நிற்பது சஜித் பிரேமதாசா அவர்களை வெல்ல வைப்பதே. எனவே வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் ஒட்டுமொத்தமாக அனைவரும் ஒன்று இணைந்து சஜித் பிரேமதாச அவர்களுக்கு வாக்களிப்பதாக உறுதியளித்திருக்கின்றார்கள்.
உண்மையில் சஜித் பிரேமதாச அவர்கள் சாதி மதம் இனங்களை கடந்து அனைவரும் ஒன்று என்று ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரே ஒரு தலைவர் இவர். எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் அனைவரும் ஒன்று திரண்டு இவருக்கு வாக்களிக்க வேண்டும்.
தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ரணில் ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலைமையின் பிரகாரம் ராஜபக்ஷ அரசாங்கம் கூறுகின்றது, சஜித் பிரேமதாசர் வெற்றி பெறுவார் என்று.
அனைவரும் ஒன்று திரண்டு எங்களுடைய சஜித் பிரேமதாச அவர்களை வெல்ல வைக்க வேண்டும். மட்டக்களப்பு தேர்தல் தொகுதியை பொருத்தவரையில் இரட்டை அங்கத்து தேர்தல் தொகுதிகள் காணப்படுகின்றது. அதாவது முஸ்லிம் தேர்தல் தொகுதி மற்றும் தமிழ் தேர்தல் தொகுதி காணப்படுகின்றது.
இதுவரை நாம் ஏமாந்தது போதும் இனியும் ஏமாறக்கூடாது எம் இரு சமூகங்களும் ஒன்றிணைந்து அனைவரும் ஒன்று திரண்டு சஜித் பிரேமதாசாவை வெற்றி பெற வைக்க வேண்டும்.
கடந்த கால வரலாற்றை உற்று நோக்குகின்ற பொழுது தமிழ் பொது வேட்பாளர் என்பது முன்னாள் பிரதமர் நீதி அரசர் விக்னேஸ்வரன் அவர்களின் தனிப்பட்ட ஒரு முடிவு அவர் தங்களுடைய பிள்ளைகளை வேறு ஒரு விதமாக இனவாதத்திற்குள் உட்படுத்தி இந்த தேர்தலுக்குள் தமிழ் வேட்பாளரை உள் நிறுத்துவது என்பது பாரிய விளைச்சலை கொண்டுவரும்.
எதிர்காலத்திலே இவ்வாறான ஒரு பிரச்சினையை உண்டு பண்ணாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்க வேண்டும். தமிழ் பொது வேட்பாளர் என்பது ஒரு தேவையற்ற விடயமாகவே கருதப்படுகின்றது.