வெதுப்பக உற்பத்தி பொருட்கள் மற்றும் அரிசி விலை குறைக்கப்பட்டதன் பலன் இன்னும் நுகர்வோருக்கு கிடைக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தகவலை, நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் டி.ஐ. உடுவார தெரிவித்துள்ளார்.
சந்தையில் வெதுப்பக பொருட்கள் உட்பட சகல பொருட்களின் விலையையும் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் பொருட்களின் விலையை காட்சிப்படுத்தாத விற்பனையாளர்களை கண்டுபிடிக்க நாடு தழுவிய ரீதியில் சோதனைகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நுகர்வோர் அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் கடந்த சில தினங்களில் ரொட்டி விலை தொடர்பாக நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட சோதனைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.