சுவிட்சர்லாந்தில் பரவி வரும் போலி நிகழ்நிலை வேலைவாய்ப்புகள் தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அந்நாட்டில் பல்வேறு துறையகளில் கடுமையான பணியாளர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், இதனை மோசடியாளர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில், வேலைவாய்ப்பு மோசடியாளர்கள் போலி விளம்பரங்களை வெளியிட்டு, தங்களை பணி வழங்குனர்களாக காட்டிக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம், வேலைக்கு விண்ணப்பிப்போரின் தரவுகளை சேகரித்து அழைப்புக்களை ஏற்படுத்தி அல்லது மின்னஞ்சல் மூலமோ தொந்தரவுகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
இதேவேளை, விண்ணப்பதாரிகளின் தரவுகளை வைத்து போலி அடையாளங்களை உருவாக்கி மோசடிகளில் ஈடுபடுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதன் காரணமாக சுவிட்சர்லாந்தில் வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கும் நிறுவனம் உண்மையானதா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.