2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலபகுதியில் 80,000 வெளிநாட்டவர்களுக்கு பணி விசா வழங்கியுள்ளதாக ஜேர்மன் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 40,000 விசாக்கள் அதிக திறன் கொண்ட பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட 3,000 அதிகமாகும்.
கடந்த ஆண்டில் 570,000 பணி வெற்றிடங்கள் ஜேர்மனியில் இருந்ததாக, ஜேர்மன் பொருளாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
அதேவேளை, தற்போது போக்குவரத்து, உற்பத்தி, கட்டுமானம், பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் பணியாளர் தட்டுப்பாடு நிலவுவதாக குறித்த ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அது நாட்டின் பொருளாதாரத்தின் மீது தொடர்ந்து தாக்கம் செலுத்தி வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, குறித்த துறைகளுக்கு தகுதியுடையோருக்கு மேலும் வாய்ப்புகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.