பிரெஞ்சு நகரமொன்றில், கால்நடைகளிடயே நீல நாக்கு நோய் என்னும் ஒரு நோய் பரவிவருவது தெரியவந்துள்ளது.
பெல்ஜியம் எல்லையோரமாக அமைந்துள்ள Marpent என்னும் நகரில், கால்நடைகளிடயே நீல நாக்கு நோய் என்னும் ஒரு நோய் பரவிவருவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளதாக கால்நடை நலனுக்கான உலக அமைப்பு தெரிவித்துள்ளது.
பூச்சிகளால் பரவும் இந்த நீல நாக்கு நோய், ஆடுகள் மாடுகள் முதலான கால்நடைகளுக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.
நெதர்லாந்து, வடக்கு பெல்ஜியம் மற்றும் மேற்கு ஜேர்மனி ஆகிய நாடுகளில் கடந்த ஆண்டிலிருந்தே இந்த நோய் பரவிவருகிறது.
சமீபத்தில் தெற்கு பெல்ஜியத்தில் பல இடங்களில் கால்நடைகளுக்கு இந்த நோய் பரவியுள்ளதால், அது பிரான்சுக்கும் பரவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நோயைக் கட்டுப்படுத்துவதற்காக, சுமார் 600,000 டோஸ் தடுப்பூசிகள் ஜேர்மனியிலிருந்தும், 4 மில்லியன் தடுப்பூசிகள் ஸ்பெயினிலிருந்தும் வாங்கப்பட்டுள்ள நிலையில், அவை விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன.