9-ம் வகுப்பில் கணித தேர்வில் தேர்ச்சி பெறாததால் தங்கையை அவரது சகோதரர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள ஒகாரா மாவட்டத்தில் 9-ம் வகுப்பில் கணித தேர்வில் தேர்ச்சி பெறாததால் தங்கையை அவரது சகோதரர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. இரவுநேரத்தில் தாய் உறங்கியபின்பு தேர்வில் தோல்வியடைந்ததை குறித்து தங்கையிடம் அவரது அண்ணன் கேள்வி கேட்டுள்ளார்.
அது பின்பு அண்ணன் மற்றும் தங்கை இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு முழித்த தாய் தனது மகனிடம் சண்டையை நிறுத்துமாறு கோரியுள்ளார். ஆனால் தாயின் பேச்சை கேட்காத மகன் தனது துப்பாக்கியை எடுத்து தங்கையை சுட்டுள்ளார். பின்பு துப்பாக்கியுடன் அங்கிருந்து அவர் தப்பியோடியுள்ளார். துப்பாக்கி சூட்டால் பலத்த காயமடைந்த அப்பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில், இது குறித்து தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தாயார் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், தங்கையை கொலை செய்த அண்ணனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றன.