இந்திய – இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சியான மித்ர சக்தி இன் 10வது அத்தியாயம் இலங்கையில் ஆரம்பமாகியுள்ளது.
மதுரு ஓயாவில் உள்ள இராணுவப் பயிற்சி பாடசாலையில் நேற்றுமுன்தினம் (12) ஆரம்பமாகிய இந்த பயிற்சியானது, எதிர்வரும் 25 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில், இரு தரப்புகளின் இராணுவத் திறனை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமென கூறப்படுகின்றது.
குறித்த கூட்டு இராணுவப் பயிற்சியானது கடந்த வருடம் இந்தியாவில் இடம்பெற்றது.
அந்தவகையில், இவ்வருடம் இலங்கையில் நடைபெறும் பயிற்சியில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி ராஜ்புதானா ரைபிள்ஸ் மற்றும் பிற ஆயுதப் படைகளை சேர்ந்த 106 படையினரும், சிறிலங்கா இராணுவத்தின் கஜபா படைப்பிரிவின் வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.