அரசியலமைப்பு விதிகளை மீறியதற்காக தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசினை பதவியில் இருந்து நீக்க
அந்நாட்டு அரசியல்சாசன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு நீதிமன்ற ஊழியர்களுக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஒருவரை, அமைச்சராக ஸ்ரெத்தா தவிசின் நியமித்ததால் அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், ஸ்ரெத்தா தவிசின் நடவடிக்கைகள் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதாக இல்லை எனவும் அவர் குற்றப் பின்னணி கொண்டவரை அமைச்சராக தேர்வு செய்து விதிகளை மீறிவிட்டார் எனவும் கூறி அவரை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.