அவுஸ்திரேலியா – மெல்போர்ன் நகரில் மின்சார மோட்டார் வண்டிகளை (electric i scooter) வாடகைக்கு விட தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தடை உத்தரவு அப்பகுதி மக்களின் பாதுகாப்பின்மைக்கான காரணத்தை அடிப்படையாகக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்சார மோட்டார் வண்டிகள் முதன் முதலில் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் மெல்போர்ன் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், அதன் அறிமுகத்தின் பின்னர் பொதுமக்கள் மத்தியில் நூற்றுக்கணக்கான விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
சில மின்சார மோட்டார் வண்டி பயனர்களின் மோசமான நடத்தையே இதற்குக் காரணம் என அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரவித்துள்ளார்.
அது மாத்திரமன்றி, பலர் நடைபாதையில் சவாரி செய்வதுடன் அவற்றை மக்கள் சரியாக நிறுத்துவதில்லை. அவை நகரத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாகவே, விபத்துக்கள் அதிகரித்துள்ளன என மெல்போர்ன் நகரின் முக்கிய மருத்துவமனை ஒன்று, 2023ஆம் ஆண்டு டிசம்பரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்த அறிக்கையின் படி, 2022இல் கிட்டத்தட்ட 250 மின்சார மோட்டார் வண்டி ஓட்டுநர்கள் காயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.