Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
”தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் தேவையற்றதொன்று”; சாணக்கியன் வெளிப்படுத்திய தகவல்!

”தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் தேவையற்றதொன்று”; சாணக்கியன் வெளிப்படுத்திய தகவல்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தற்போதைய சூழ்நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்கள் தமிழ் பொதுவேட்பாளர் தேவையற்ற விடயம் என்பதில் ஒருமித்த கருத்துடன் உள்ளதாகவும், இது இன்னொரு வேட்பாளரை வெல்ல வைப்பதற்காகவே பொது வேட்பாளர் என்ற விடயம் அரங்கேற்றப்பட்டது என்பது முற்று முழுதான உண்மை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டு ஊடக அமையத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

முக்கியமாக தற்போது ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்கா, ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ அத்தோடு நாமல் ராஜபக்சவும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் தெற்கிலேயுள்ள வாக்குகள் சிதறிச் சின்னா பின்னமாகக் கூடிய நிலை உருவாகலாம். அந்தவகையில் தமிழ் மக்களுடைய வாக்குகளுக்குக் கூடிய பெறுமதி காணப்படும். அதில் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய அதிகூடிய வாக்குகள் இருக்கிறது.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சிந்தித்து தமது பெறுமதியான வாக்கினை அளிக்க வேண்டிய கடப்பாடுடையவர்கள். இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு மாவட்டத் தமிழரசுக் கட்சியினராகிய நாம் நேற்று முன்தினம் எமது மாவட்ட தொகுதி மற்றும் பிரதேச மட்ட மகளீர், வாலிபர் அணி உறுப்பினர்களை அழைத்து அவர்களது கருத்துக்களை உள்வாங்கியிருந்தோம்.

வவுனியாக் கூட்டத்தில் கலந்து கொண்ட 33 உறுப்பினர்களில் ஒருவரைத் தவிர மற்றைய உறுப்பினர்கள் அனைவரும் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் தேவையற்றதொன்று என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

இவ்வாறான நிலையில் கட்சி உறுப்பினர்கள் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்கும் வகையில் கூட்டங்களில் கலந்து கொள்வதைத் தவிர்த்தல் வேண்டும். ஏனெனில் தமிழரசுக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதால் கட்சி உறுப்பினர்களிடையே குழப்பநிலை உருவாகலாம். நாம் கட்சி ரீதியாக பொது வேட்பாளருக்கு ஆதரிப்பதாக எதுவித கருத்தும் இதுவரை வெளியிடவில்லை- என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து
செய்திகள்

மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து

July 22, 2026
ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்
செய்திகள்

ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்

July 22, 2026
போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!
செய்திகள்

போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!

July 22, 2026
அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் பதவியில் இருந்து பாறுக் நாஜி விலகல்
அரசியல்

அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் பதவியில் இருந்து பாறுக் நாஜி விலகல்

July 22, 2026
அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டலா?- உடனே 109-க்கு அழையுங்கள்; பொலிஸார்!
செய்திகள்

அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டலா?- உடனே 109-க்கு அழையுங்கள்; பொலிஸார்!

July 22, 2026
கிழக்கு மாகாண சுகாதார தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறமுடியாத நிலை
அரசியல்

கிழக்கு மாகாண சுகாதார தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறமுடியாத நிலை

July 22, 2026
Next Post
இந்தியாவில் அடுத்தடுத்து பதிவான இரு நிலநடுக்கங்கள்!

இந்தியாவில் அடுத்தடுத்து பதிவான இரு நிலநடுக்கங்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு