சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகன சாரதிகளுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வு, மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் வழிகாட்டுதலின் உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் தலைமையில் நேற்றுமுன்தினம்(19) மட்டக்களப்பில் நடைபெற்றது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மாவட்ட செயலகமும் இணைந்து சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கும் வாகன சாரதிகளுக்கு ‘சாரதியின் இரு கரங்கள் மூலம் பிள்ளைகளை பாதுகாத்திடுவோம் ‘ எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வை வழங்கின.
சிறார்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் முகமாகவும் துஸ்பிரயோகம் இடம்பெறாவண்ணம் முற்தடுப்பு மேற்கொள்வதற்கு தேவையான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள், பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள், போக்குவரத்து பொறுப்பு பொலிஸ் அதிகாரி, மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.