கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 02 ஸ்கேன் இயந்திரங்களும் 02 எம்.ஆர்.ஐ இயந்திரங்களும் தொழிநுட்பக் கோளாறினால் பாதிக்கப்பட்டு சுமார் இரண்டு மாதங்கள் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இயந்திரங்கள் இதுவரை சீர் செய்யப்படவில்லை என அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.
இதன் காரணமாக சிகிச்சைக்காக வரும் நோயாளர்களின் சத்திரசிகிச்சை மற்றும் சிகிச்சை சேவைகள் தடைப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இயந்திரம் ஒன்றை பழுது பார்ப்பதற்காக ஜப்பானில் இருந்து குழுவொன்று வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் குமார விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய இயந்திரங்களுக்கு தேவையான சில பாகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.