Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் மாணவி ஒருவரை வார்த்தைகள் மூலமாக இம்சைப்படுத்தி வந்த ஆசிரியர்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மட்டக்களப்பில் மாணவி ஒருவரை வார்த்தைகள் மூலமாக இம்சைப்படுத்தி வந்த ஆசிரியர்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதிக்கு, மட்டக்களப்பு மாணவி ஒருவர் தனக்கு சித்திரப்பாட ஆசிரியர் ஒருவர் வாய்மூலமாக பாலியல் துஷ்பிரயோக வார்த்தைகளை பிரகோகித்து வருவதாக செய்த முறைப்பாட்டையடுத்து, நீதிமன்றில் சரணடைந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியரை எதிர்வரும் 2ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (20) உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பில் பெண்கள் பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்றுவரும் மாணவி ஒருவருக்கு அதே பாடசாலையில் கற்பித்துவரும் ஆசிரியர் ஒருவர் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வாய் மூல பாலியல் துஷ்பிரயோகம் கொண்ட வார்த்தைகளை பிரயோகித்து வந்துள்ளார்.

இது தொடர்பாக குறித்த ஆசிரியர், எவருக்கும் தெரிவித்து என்னை ஒன்றும் செய்யமுடியாது, உயர்தர மாணவி பாலியல் துஸ்பிரயோகம் என முகநூலில் பதவிவிடுவேன் எனவும், தான் ஒரு அரசியல் கட்சி சார்ந்தவர் எனவும், என்னை எதிர்த்தால் இந்த மாவட்டத்தில் இருக்கமுடியாது எனவும் அச்சுறுதியுள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அவரது வகுப்பாசிரியர் மற்றும் பெற்றோருக்கு தெரிவித்துவந்துளார். இந்த நிலையில் கடந்த மாதம் 11ம் திகதி குறித்த ஆசிரியர் பாடத்திட்டத்தில் இல்லாத படங்களை வரையுமாறும், இல்லாவிட்டால் வகுப்பறையில் இருந்து வெளியேறுமாறும் தெரிவித்த நிலையில் மாணவி வகுப்பறையில் இருந்து வெளியேறி அதிபரிடம் முறையிட சென்றுள்ளார்.

இந்த நிலையில் அப்போது அதிபரும் அங்கு இல்லாத நிலையில் குறித்த மாணவி தனது வீட்டிற்கு சென்று தனக்கு நடந்த அநீதியை பெற்றோருக்கு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பெற்றோர், பாடசாலை பிரதி அதிபரின் கவனத்திற்கு கொண்டுசென்ற நிலையில் அவர் பாடசாலை அதிபர் கவனத்திற்கு கொண்டுசென்று, பெற்றோரிடம் கடிதம் ஒன்றையும்வாங்கி, தாங்கள் இந்த பிரச்சனைக்கு தீர்வு பெற்றுதருவதாகஉத்தரவளித்துள்ளார்.

இந்த உத்தரவாதத்தின் பின்பு மீண்டும் பாடசாலைக்கு மாணவி சென்ற போது, குறித்த ஆசிரியர், மாணவியின் கல்வி கற்கும் சூழலை குழப்பிவந்த நிலையில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக குறித்த மாணவி, ஜனாதிபதிக்கு சிங்கள மொழியில் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி உடன் விசாரணை செய்யுமாறு பொலிசாருக்கு கடந்த யூலை 22ம் திகதி பணிப்புரை விடுத்ததையடுத்து பொலிசார் பாதிக்கப்பட்ட மாணவியிடமும், பாடசாலை அதிபர் மற்றும் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களிடம் வாக்கு மூலத்தை பெற்றுள்ளனர்.

அதன் அடிப்படையில் பொலிஸ் நிலையத்துக்கு குறித்த ஆசிரியரை வருமாறு அழைக்கப்பட்டபோதும் அவர் பொலிஸ் நிலையம் செல்லாது தலைமறைவாகி வந்துள்ள நிலையில், கடந்த 7ம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் சிரேஸ்ட சட்டத்தரணி பிரேம்நாத் தலைமையிலான் சட்டத்தரணிகள் ஊடாக முன்நகர்வு பத்திரம் விண்ணப்பித்து நீதின்றில் ஆஜராகிய போது, குறித்த ஆசிரியர் நேற்று 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு நேற்று 20ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதவான், பொலிஸாரிடம் இந்த சம்பவம் தொடர்பாக மீண்டும் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளுமாறு கட்டளையிட்டதுடன், ஆசிரியரை எதிர்வரும் 2ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Tags: Battinaathamnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!
செய்திகள்

இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!

September 5, 2026
குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
Next Post
உலகத்தன்மம் சமூக அமைப்பின் செயற்பாடாக திருப்பெருந்துறை வட பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு!

உலகத்தன்மம் சமூக அமைப்பின் செயற்பாடாக திருப்பெருந்துறை வட பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.