முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அளுத்கம கந்த பௌத்த விகாரைக்கு முத்துராஜா என்ற யானை வழங்கப்பட்டதால் வனஜீவராசிகள் திணைக்களம் அதனை பொறுப்பேற்க முடியாது என வனவிலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று முத்துராஜா என்ற யானையை மீளவும் தாயிலாந்திற்கு கொண்டு செல்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன.
இதன் போது சபையில் முன்வைக்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு பவித்ரா வன்னியாராச்சி இவ்வாறு தெரிவித்திருந்தார்.
தாய்லாந்து நாட்டினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட முத்துராஜா என்ற யானை, முன்னாள் ஜனாதிபதியால் அளுத்கம கந்த விகாரைக்கு புண்ணிய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
விகாரைக்கு வழங்கப்பட்டதன் பின்னர் வனஜீவராசிகள் திணைக்களம் பொறுப்பேற்க முடியாது.
விகாரைக்கு புண்ணிய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட இந்த உடலியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக விலங்கின நலன்பேண் அமைப்புக்கள் முறைப்பாடளித்ததை தொடர்ந்து இந்த யானை,
தெஹிவளை தேசிய மிருககாட்சிசாலைக்கு விகாரையின் அனுமதியுடன் கொண்டு செல்லப்பட்டது.
தற்போது யானைக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.
இந்த யானை விவகாரம் தொடர்பில் கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதரகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். இருப்பினும் இந்த யானையை தாய்லாந்துக்கு கொண்டு செல்லும் உறுதியான நிலைப்பாட்டில் தாய்லாந்து அரசாங்கம் உள்ளது எனவும் தெரிவித்தார்.