பிரித்தானியாவில் வெடித்த வன்முறைகளின் பின்னர், அந்நாட்டில் ஒரு அச்ச நிலைமை அதிகரித்துள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அதன் போது, சமீபத்தில் பிரித்தானியாவில் ஏற்பட்ட புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வன்முறைகளின் பின், நான்கில் மூன்று பங்கு மக்களுக்கு வலதுசாரியினர் குறித்த அச்சம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
Ipsos என்னும் ஆய்வமைப்பு வெளியிட்ட ஆய்வு முடிவுகளின் படியே இது தெரியவந்துள்ளது.
அத்தோடு, இந்த வன்முறைகளின் போது அந்நாட்டு அரசியல்வாதிகளும் பெரும்பாலும் கவனம் செலுத்தவில்லை என மக்கள் கருதியுள்ளனர்.
ஆய்வின் போது, மக்களிடம் எந்தெந்த விடயங்கள் உங்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதன் போது, வலதுசாரி பயங்கரவாதம் குறித்துதான் தாங்கள் அதிகம் கவலைப்படுவதாக, 73 சதவிகிதம் பிரித்தானியர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மார்ச் மாதத்தை விடவும் வலதுசாரி பயங்கரவாதம் குறித்து கவலைப்படுவதாக தெரிவித்துள்ளவர்கள் எண்ணிக்கை 11 வீதம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.