தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பாசறையானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவருபரஞ்சினி முகுந்தன் தலைமையில் மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் கடந்த வியாழக்கிழமை (22) இடம் பெற்றது.
சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பாகவும் பொது மக்களுக்கு தகவல்களை வழங்குதற்குமான நிகழ்சி திட்டமாக இந் நிகழ்வு இடம் பெற்றது.
சிறுவர்களுக்கு இடம் பெறுகின்ற துஷ்பிரயோகங்கள் மற்றும் தாதி அலுவலர்களின் சிறுவர்கள் பாதுகப்பு பற்றிய அறிவு , திறமைகள் மற்றும் மனப்பாங்கினை மேம்படுத்துவதற்கு வளர்ப்பதற்கான சந்தர்ப்பமாக இப் பாசறை அமைந்திருந்தது.
நாடலாவிய ரீதியில் சிறார்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் முகமாகவும் துஸ்பிரயோகம் இடம் பெறாவண்ணம் முற்தடுப்பு மேற்கொள்வதற்கு தேவையான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட உளசமூக உத்தியோகத்தர் ஆர். பிரபாகர் , மற்றும் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம் . ஆர் .நிஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.