மனிதர்கள் அழியும் அபாயத்தை எதிர்கொண்டு வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸின் ஆய்வு அறிக்கையும் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, மனித பாலினத்தை நிர்ணயிக்கும் குரோமோசோம், கடந்த இலட்சக்கணக்கான ஆண்டுகளில் பல மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 166 மில்லியன் ஆண்டுகளில் Y குரோமோசோம் அதன் பெரும்பாலான மரபணுக்களை இழந்துவிட்டதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
இது ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு 10 மரபணுக்களின் இழப்பு விகிதம் எனவும் கூட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, 4.5 மில்லியன் ஆண்டுகளுக்குள் Y குரோமோசோம் முற்றிலும் மறைந்துவிடும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.
அதன் அடிப்படையில் Y குரோமோசோம் தொலைந்தால், பிறந்தவர்கள் அனைவரும் பெண்களாகவே இருப்பார்கள் என்பதும் இதில் குறிப்பிடத்தக்கது.