Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து ஐ.நா கவலை!

இலங்கை பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து ஐ.நா கவலை!

3 years ago
in முக்கிய செய்திகள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நடப்பு அமர்வில், இலங்கை தொடர்பான முக்கிய குழு தமது அவதானங்களை வெளியிட்டுள்ளது.

கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மெசிடோனியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய இலங்கை தொடர்பான முக்கிய குழுவின் அறிக்கையை ஐக்கிய இராச்சியத்தின் மனித உரிமைகள் தூதுவர் ரீட்டா பிரெஞ்ச் வெளியிட்டார்.

அதில், காணிகளை மீளளித்தல், நீண்டகால தடுப்புக்காவல் மற்றும் ஊழல் தொடர்பான விடயங்களை நிவர்த்தி செய்வதற்கான இலங்கையின் ஆரம்ப நடவடிக்கைகளை தாம் வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து இலங்கையர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு செயல்முறையைத் தொடங்குவதற்கு இந்த நடவடிக்கைகள் ஒரு அடிப்படையை வழங்க முடியும் என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து தாம் கவலையடைவதாக ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுவதற்கான தொடர்ச்சியான முயற்சி மேற்கொள்ளப்படும் நிலையில், சர்வதேச கடமைகளுடன் ஒத்துப்போவதை உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்றுபடும் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாக முக்கிய நாடுகள் குறிப்பிட்டுள்ளன.

நல்லிணக்கத்திற்கான அதன் உறுதிப்பாட்டை இலங்கை முன்னெடுத்துச் செல்லும் போது, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், மற்றும் கடந்த கால மற்றும் முரண்பாடுகள் மற்றும் தண்டனையின்மைக்கான மூல காரணங்களை நிவர்த்தி செய்யும் பரிந்துரைகளை அர்த்தமுள்ளதாக கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தை முக்கிய குழு வலியுறுத்தியுள்ளது.

நாட்டின் தேர்தல் முறைமைகளில் வாக்காளர்களின் நம்பிக்கையைப் பேணுவதன் மூலமும் மற்றும் ஆணைக்குழுக்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதன் மூலமும் இலங்கை தனது பிரதிநிதித்துவ ஜனநாயகத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் உயர்ஸ்தானிகர் மற்றும் அவரது அலுவலகத்துடன் இணைந்து பணியாற்றுமாறும், மனித உரிமைகள் பேரவையின் 51-1 தீர்மானத்துக்கு ஆதரவளிக்க தயாராக இருக்குமாறும் இலங்கைக்கு அழைப்பு கோர் குழு என்ற ஜெனீவாவின் முக்கிய நாடுகள் குழு அழைப்பு விடுத்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
Next Post
கொழும்பில் பதற்றநிலை; துப்பாக்கிச் சூட்டில் மற்றுமொருவர் பலி!

கொழும்பில் பதற்றநிலை; துப்பாக்கிச் சூட்டில் மற்றுமொருவர் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.