கொழும்பிலிருந்து புத்தளம் அருவக்காடு குப்பை மேட்டுக்குப் புகையிரதத்தின் மூலம் குப்பைகளை ஏற்றிக் கொண்டு செல்லும் திட்டம் நேற்று (25) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் போது, புத்தளம் – அருவக்காடு குப்பை மேட்டில் குப்பைகளை இறக்குதல் மற்றும் ஏற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நகராட்சி கழிவுகளை அகற்றும் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு நகரில் நாளாந்தம் சேகரிக்கப்படும் சுமார் 1,200 மெற்றிக் தொன் குப்பைகள் களனியிலிருந்து சுமார் 170 கிலோமீற்றர் தொலைவில் உள்ள புத்தளம் – அருவக்காடு குப்பை மேட்டுக்குப் புகையிரதத்தில் கொண்டு செல்வதற்கு நேற்று (25) நடவடிக்கை எடுக்கப்பட்டது.