விடுதலைப் புலிகள் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏதோ ஒரு மூலையில் தக்க வைக்கப்பட்டிருந்தால் இன்று ஒரு சமஸ்டி அரசியல் அமைப்பு கொண்டுவரப்பட்டிருக்கும். துரதிஷ்டவசமாக 2009ஆம் ஆண்டு தலைவர் பதிவிக்கு வந்த, இந்தியாவின் முகவராக செயற்பட்ட மறைந்த இரா.சம்மந்தன் வேறு கொள்கைகளை வைத்து பேரம் பேச முயன்றிருந்தால் அன்று மாற்றங்கள் ஆரம்பித்திருக்கும். ஆனால் புலிகளை அழித்தால் அதற்கு பின்னர் தலைமை பதிவிக்கு வரப் போகின்றவர்கள் இந்தியா, அமெரிக்காவின் முகவர்களாக தொடர்ந்து இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தபடியால் தான் விடுதலைப் புலிகள் அழித்தொழிக்கப்பட்டது என எஸ்.கஜேந்திரன் எம்.பி தெரிவித்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேர்தலை புறக்கணிக்க வேண்டி அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) அதன் புதிய அமைப்பாளர் த.சுரேஸ், அம்பாறை மாவட்ட அமைப்பாளர் துசாந்தன் தலைமையில் துண்டுபிரசுரம் விநியோகிக்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இங்கு கலந்து கொண்ட அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
சந்திரிக்கா ஒரு இனப்படுகொலையாளி. எங்களை அழிக்க ஒன்றாக நின்றார். இன்று அவருக்கு அரசியலில் இடமில்லை, அவர்கள் தங்களுடைய சுபபோகங்களை உறுதிப்படுத்திக் கொள்ள கட்சி சார்ந்த வேலைப்பாடுகளை வைத்து அவர்கள் அமைதியாக இருக்க கூடும். ஆனால் எங்களுடைய நிலைப்பாடு தொடர்ச்சியானது.
2005 தேசிய தலைவர் பிரபாகரன் இந்த தேர்தலை புறக்கணிப்பதன் மூலமாக தமிழர்களின் உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான அழுத்த கருவியாக இதை கையில் எடுத்திருந்தார்.
2002 சமாதான உடன்படிக்கையின் போது விடுதலைப் புலிகளிடம், வடகிழக்கில் 10 ஆண்டுகளுக்கு ஒரு இடைக்கால நிர்வாகம் தரப்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்கை இருந்தது. குறிப்பாக தன்னாட்சி அதிகாரசபை 2003 ம் ஆண்டு ஒக்டோபர் 30 ம் திகதி வைக்கப்பட்டிருந்தது.
அந்த நிலமையில் இறமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்குமான ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும் முகமாக அந்த தேர்தல் பகிஸ்கரிப்பு இடம்பெற்றிருந்தது.
ஆகவே இது ஒரு தொடர்ச்சி. நாங்கள் இன்று, நேற்று எடுத்த முடிவு அல்ல. இது 2002 தேசிய தலைவர் எடுத்த முடிவு. எனவே நாங்கள் இது ஒரு ஜனநாயக ரீதியான அனுகுமுறை இந்த ஜனாதிபதி தேர்தல் நடாத்த வேண்டும் என பாராளுமன்றத்தில் இடைவிடாது எமது கட்சி தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரும், நானும் குரல் கொடுத்துவந்தோம்.
ஏன் என்றால் தேர்தல் நடந்தால் தான் நாங்கள் பேரம் பேச முடியும். இந்த தேர்தல் ஏதே ஒரு காரணத்துக்காக ஒவ்வொரு வருடத்துக்கு ஒருமுறை வருமாக இருந்தால் அடிக்கடி பேரம் பேசுகின்ற வாய்ப்புக்கள் வரும். நாங்கள் ஜனநாயக்தையே தேர்தலையே எதிர்க்கவில்லை தேர்தலை பேரம் பேசுவதற்கான ஒரு ஆயுதமாக நாங்கள் பயன்படுத்துகின்றோம்.
எங்களைத்தவிர மற்ற எல்லோரும் அரசாங்கத்தின் நேரடி அல்லது மறைமுகமாக பங்காளிகளாக செயற்படுகின்றவர்கள். ரணில் பதிவி ஏற்ற பின்னர் வீழ்ந்திருந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியொழுப்புவதற்கு அவ் எல்லா கட்சிகளையும் எல்லா சமூகத்தையும்அரவணைத்த இந்த நாட்டை முன்னுக்கு கொண்டு வருபவர் என காட்டுவதற்கு ஜ.எம்.எப் இடம் இருந்து உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்காக தமிழரசு கட்சி.ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ் மக்கள் கூட்டணி, விக்கினேஸ்வரன் ஆகியோர் அவர் அழைக்கு முன்னரே நாய்க்குட்டிபோல ஓடிச் சென்று அவர் கொடுத்ததை சாப்பிட்டுவிட்டு அவர் ஓற்றையாட்சிக்குள் தீர்வு என சொன்ன பின்னரும் சென்றிருந்து கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள்.
நாமல் ராஜபக்ஸ தமிழ் மக்களுக்கு எதுவும் தரமாட்டோம் என்று தெரிவித்தமை ஒரு ஆச்சரியத்துக்குரிய விடையமல்ல 75 வருடங்களாக வந்து தமிழர்களுக்கு உரிமை கொடுக்க மாட்டோம் என சொல்லி வந்துள்ளனர். அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எப்போதுமே இது ஒரு பௌத்தநாடு, சிங்கள நாடு இதை பேணி பாதுகாப்போம் என்ற அடிப்படையில் வெளியிட்டு வந்துள்ளனர்.
ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனதிலும் இது சிங்கள நாடு வடகிழக்கில் ஆயிரம் புத்த விகாரை அமைப்போம் என இருந்திருக்கின்றது. சஜித் பிரேமதாஸாவும் அதே போல தான் அவர் புத்தசாசன அமைச்சராக இருந்தபோது நீராவியடி பிள்ளையார் கோவில் பகுதியில் இறந்த தேரரை எரித்தமை யாழ் நாவற்குழியில் ரயில்வே பகுதியில் சட்டவிரோத விகாரை அமைத்தார்.
அனுர குமாரவைப்பற்றி சொல்ல தேவையில்லை மிக மோசமான இனவெறி கொண்ட ஒருவர். இறுதி பேரிலே தமிழர்கள் ஒரு இலச்சத்து 50 ஆயிரம் பேரை அழித்தொழிக்க இலச்ச கணக்கான சிங்கள இளைஞர்களை திரட்டி இராணுவத்திக்கு கொடுத்த ஒரு கொலை வெறி பிடித்த ஒரு கூட்டத்தின் தலைவர்.
அதுமட்டுமல்ல வடகிழக்கை வழக்கு போட்டு பிரித்த ஒரு மிக கொடூரமான இனவெறியர்கள். எல்லோரது நிலைப்பாடுகளும் அதுதான் நாமல் ராஜபகஸவின் நிலைப்பாடு ஒரு புதிய நிலைப்பாடு கிடையாது. இதற்காகத்தான் நாங்கள் சொல்லுகின்றேம் தமிழர்களுக்கு உரிமை கொடுக்கப் போகின்றீர்கள் என்று சொன்னால் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எழுதி, சொந்த சிங்கள மக்களுக்கு சொல்லுங்கள் இந்த தோலிவியடைந்த ஒற்றையாட்சியை ஒழித்து சமஸ்டி கொண்டுவரப் போகின்றோம் என சொல்லுங்கள்.
அதற்கொல்லாம் அப்பால் நேற்று முளைத்த காளானாக இருக்கின்ற இந்த நாமல் ராஜபக்ஸ இந்த கருத்தை சொல்லக் கூடிய துணிச்சலை கொடுத்தது எம்.சுமந்திரன், இரா.சம்மந்தன், பா. அரியேந்திரன் சி.சிறீதரன் உட்பட இந்த தமிழரசு கட்சியின் வீட்டுச் சின்னத்திலே 2010,2015,2020 ஆண்டில் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் அத்துடன் விக்கினேஸ்வரனும் முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும்.
ஏன் என்றால் ஜ.நா.மனித உரிமை பேரவைக்கு குற்றவியல் விசாரணையை நடாத்துவதற்கு அதிகாரங்கள் இல்லை என்று நன்றாக தெரிந்த பிற்பாடும் தொடர்ச்சியாக உள்ளக விசாரணைக்குள், பொறுப்பு கூறலை முடக்கி சர்வதேச விசாரணை வேண்டாம் என சொல்லி இனப்படுகொலையாளிகளை பாதுகாக்கின்ற செயற்பாட்டில் இவர்கள் எல்லோரும் கூட்டாக செயற்பட்டு வந்தவர்கள்.
2019 கோட்டா பதவி ஏற்ற பிற்பாடு, 2021 ஜனாதிபதியாக இருக்கின்ற போது இலங்கை தொடர்பாக ஒரு தீர்மானம் வந்த சூழ்நிலையில் பொறுப்பு கூறல் விடையத்தை மனித உரிமை பேரவையில் இருந்து வெளியே எடுத்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றிக்கு எங்கள் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொண்டுபோக வேண்டும் என்ற முயற்சியை மிக தீவிரமாக முன்னெடுத்திருந்தபோது கூட ஜெனிவாவில் கொண்டுவரப்பபட்ட தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் என 2019 வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட தலைவர்கள் கடிதம் எழுதினார்கள்.
இந்த கயவர்கள் இனப்படுகொலையாளிகளை பாதுக்க கொடுத்த ஆதரவு துணிச்சல்தான் இன்று நாமல் இந்த திமிரை கொடுத்திருக்கினறது.